தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம்  சர்ச்சையை உருவாக்கியுள்ளது

240

நடுத்தர மக்களிற்கு என்ன செய்தீர்கள் என இந்திய பிரதமர் நரேந்திரமோடியிடம் தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பிய சம்பவம்  சர்ச்சையை உருவாக்கியுள்ளது

புதுவை மாநில தொண்டர்களுடன் மோடி வீடியோ கொன்பரன்ஸ் முறையில் உரையாடிய வேளை தொண்டர் ஒருவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

நரேந்திர மோடி உரையாற்றிய பின்னர் அவர் தொண்டர்களின் கேள்விகளிற்கு பதில் அளித்துக்கொண்டிருந்தவேளை தொண்டர் ஒருவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நிர்மல் குமார் ஜெயின் என்பவர் நடுத்தர மக்களிடமிருந்து வரியை வசூலிப்பது குறித்து மாத்திரம் ஆர்வமாக உள்ளீர்கள் நடுத்தர வர்க்கத்தினருக்கு என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதியாகயிருக்க நடவடிக்கை எடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மோடி இறுகிய முகத்துடன் பதிலளித்துள்ளார்.

SHARE