மட்டகளப்பு பிரதேசத்தின் தொழிற்சாலைகள் புணரமைக்கப்பட்டு பாவணைக்கு விட வேண்டும் என்பதுடன் தீக்கிரையாகிய கிளிநெச்சிசந்தையையினை கூடிய விரைவில் புனரமைத்து தருமாறும் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (20) பாராளுமன்ற பிராந்திய அபிவிருத்தி தொடர்பான குறைநிரப்பு பிரேணையில் உறையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புனரமைக்கப்படாமல் உள்ள வாழைச்சேனை காகித தொழிற்சாலை மற்றும் மண்டூரில் உள்ள ஓட்டுத் தொழிற்சாலை என்பனவற்றை விரைவில் புணரமைக்க வேண்டும் என கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் பைசர் முஸ்தபாவினுடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
மேலும் கிளிநெச்சியில் தீக்கிரையாகிய சந்தையையினை மிக கூடிய விரைவில் புனரமைத்து தருமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இதன் போது கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும் மேல்மாகாணம் , தெற்குமாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களின் அபிவிருத்திக்காக அமைச்சு இருக்கின்ற பொழுது வட மாகாணத்திற்காக அமைச்சு ஒன்றை ஏன் உருவாக்க முடியவில்லை என கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.