தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

270

யாழ். மாநகரசபையின் தொழிலாளர்கள் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (03) முதல் ஆரம்பித்துள்ளனர்.

இதனால், யாழ். மாநகர சபையின் அன்றாடச் செயற்பாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள்,

எங்கள் தேவைகள், முன்னேற்றங்கள் குறித்தும், தொடர்ந்து எதிர்கொள்ளும் இடையூறுகள் குறித்தும் எமது நிர்வாக மட்டத்துடன் சந்திப்புக்களை மேற்கொண்டு தெளிவுபடுத்தியிருந்தோம்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளை செவிமடுப்பதற்கோ, நடைமுறைப்படுத்துவதற்கோ நிர்வாகம் தயார் நிலையில் இல்லை.

நாங்கள் தொடர்ச்சியாக உதாசீனப்படுத்துவதையும் காணக் கூடியதாகவுள்ளது.

எமது பல்வேறு கோரிக்கைகளையும் கடந்த 18 மாதங்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் புதிய ஆணையாளர் பதவியேற்றுப் பத்து மாதங்கள் கடந்துள்ளன.

எமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் இதுவரையும் வழங்கப்படவில்லை.

எனவே, தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நாம் இன்று ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் நிரந்தரத் தீர்வு காணும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என மாநகர சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90.

SHARE