உலகம் முழுவதும் இந்த தொழிலாளர் தினமானது கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில் வடகிழக்கில் உள்ள மக்கள் பாரதூரமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே தமிழ்பேசும் உழைக்கும் வர்க்கம் அவர்களுடைய அனைத்து அடிப்படைப் பிரச்சனைகளுக்கும் இந்த தொழிலாளர் தினத்தில் தீர்க்கப்பட்டு ஏனையவர்களைப் போன்று சம அந்தஸ்துடன் அவர்களும் வாழவேண்டும் என்று நான் இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ளகின்றேன்.