தொழில் தருணரின் முறையற்ற நடவடிக்கை! ஹொங்கொங்கில் இலங்கை பெண் செய்த காரியம்

300

ஹொங்கொங் நாட்டில் இலங்கை பெண் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொங்கொங் நாட்டில் பணியாற்றி வரும் கமலாதேவி என்ற இலங்கை பெண்ணே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். 2012ஆம் ஆண்டு முதல் தொழில் தருணரால் கமலாதேவி முறையற்ற விதத்தில் நடத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அடிமைத் தொழிலுக்கு எதிரான சர்வதேச சட்டம் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கமலாதேவி வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE