தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

496

மலையகத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைரய நிறைவேற்றக் கோரியும் அவர்களது தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது

குறித்த கவனயீர்ப்பு ஊர்வலம் பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக ஆரம்பமான இந்த ஊர்வலம் ஏ9 வீதி வழியாக வந்து பிரதான பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து வவுனியா பசார் வீதி வழியாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தது.

மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதிக்கு வழங்கி வைப்பதற்கான மகஜரினை மாவட்ட அரச அதிபர் ரோஹண புஸ்பகுமாரவிடம் கையளித்தனர்.

இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் “தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கு, ஏமாற்றாதே ஏமாற்றாதே தொழிலாளர்களை ஏமாற்றாதே, வெல்லட்டும் வெல்லட்டும் தோட்டத் தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும், வெல்லட்டும் உரிமைக்கான போராட்டம், உழைப்பிற்கான போராட்டம் வெல்லட்டும், வேலைகொடு வேலைகொடு, உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடு போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.பி. நடராஜ், உட்பட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10 625-0-560-320-160-600-053-800-668-160-90-11 625-0-560-320-160-600-053-800-668-160-90-12

SHARE