சென்னை, மும்பை அணிகள் நேற்று ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோதியது. உலக கிரிக்கெட் ரசிகர்களே மிக ஆவலுடன் அந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.
மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இதற்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், நேற்றைய போட்டியில் தோனியின் அவுட் தற்போது வரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் இது அவுட் இல்லை என்றே கூறி வருகின்றனர், அந்த அவகையில் பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும் இது அவுட் இல்லை என்று கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.