
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது ஆத்திரமான மனநிலையில் செயற்படுவதாக கூறப்படுகிறது.
மகிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போதே தோல்வியடைந்த ஒரே ஜனாதிபதி.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்தார். அதேபோன்ற படுதோல்வியை அவர் பொதுத் தேர்தலில் சந்திப்பார் என எதிர்வுகூறப்பட்டு வருகிறது. இந்த தோல்வியை தானும் உணர்ந்து கொண்டுள்ளதால், அவர் இவ்வாறு ஆத்திரமடைந்த மனநிலையில் செயற்படுவதாக பேசப்படுகிறது.
மகிந்த ராஜபக்ச ஆத்திரமடைந்த நிலையில் செயற்படும் காணொளி ஒன்று நேற்று ஊடகங்களில் முதல் முறையாக வெளியாகியது அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற மகிந்த ராஜபக்ச மேடைக்கு அருகில் இருந்த தனது ஆதரவாளர்களை சிலரை தாக்க முயற்சிக்கும் காட்சி அந்த காணொளியில் இடம்பெற்றிருந்தது.
நேற்றைய அசம்பாவிதத்தை நியாயப்படுத்தும் மஹிந்தவின் ஊடகப்பேச்சாளர்
அகுரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, நபர் ஒருவர் மீது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை அவரது ஊடக பேச்சாளர் மூலம் நியாயப்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அவ்விடத்தை விட்டு செல்லும் போது, நபரொருவர் இடையூறு செய்ததாக மஹிந்தவின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நபர் இரண்டு முறை மஹிந்தவின் கையை பிடித்தமையே இந்நிலைமை தோன்றுவதற்கு காரணம் எனவும், அவர் குடிபோதையில் இருந்துள்ளார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் இச்சம்பவம் தொடர்பில் உறுதியான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
எனினும் முன்னாள் ஜனாதிபதி கலந்து கொள்ளும் பேரணிக்காக உயர் மட்ட பாதுகாப்பு வழங்கப்பட்ட போதிலும், மேடையில் அவர் நுழையும் இடத்திற்கு குடிபோதையுடன் நபர் ஒருவர் வந்திருந்ததாக கூறப்படும் கருத்து தொடர்பில் நம்பிக்கையற்ற நிலைமை ஒன்றே தோன்றியுள்ளதாக கூறப்படுகின்றது.
மக்களை தாக்கிய மகிந்த! மகிந்தவை தாக்கிய மக்கள்! அதிர்ச்சி வீடியோ