தோழா, ஜீரோ மக்களின் எதிர்ப்பார்ப்பு என்ன?

222

தோழா, ஜீரோ மக்களின் எதிர்ப்பார்ப்பு என்ன? - Cineulagam

நாளை கார்த்தி-நாகர்ஜுனா நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பில் தோழா படம் திரைக்கு வரவிருக்கின்றது. அதற்கு நேர் எதிராக வளர்ந்து வரும் நடிகர்கள், புதிய முயற்சி குறைந்த பட்ஜெட், வித்தியாசமான ட்ரைலர் என ரசிகர்களை கவர ஜீரோ படம் வெளிவரவிருக்கின்றது.

இதில் வழக்கம் போல் எல்லோருடைய கவனமும் தோழா மீது தான், ஏனெனில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நாகர்ஜுனா தமிழில் நடித்திருக்கும் படம், கார்த்தி-தமன்னா கலக்கல் ஜோடி ரீஎண்ட்ரி என பல சிறப்பு அம்சங்கள் உள்ளது.

படத்தின் ட்ரைலர் செம்ம கலர்புல்லாக இருக்கிறது, படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பது கூடுதல் பலம், நட்பு(நாகர்ஜுன்)+கார்த்தி+காதல்(தமன்னா) என முக்கோண உறவுகளை அழகாக இப்படம் சித்தரிக்கும் என எதிப்பார்க்கப்படுகின்றது.

படம் வந்து 1 அல்லது 2 ஷோக்களில் ஆடியன்ஸ் பாசிட்டிவ் டாக் மூலமாக பல படங்கள் வெற்றியடைந்துள்ளது, அப்படி ஒரு வாய்ப்புஜீரோவிற்கும் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், ட்ரைலரிலேயே மிரட்டியிருந்தனர், இது கனவா இல்லை என்ன உலகம்? என பலரையும் ஆச்சரியப்படுத்தியது, இந்த ஆச்சரியம் படம் முழுவதும் இருந்தால் கண்டிப்பாக ஜீரோ நூறாகவும் வாய்ப்பு உள்ளது.

SHARE