நடிகை த்ரிஷா தற்போது சினிமாவில் மட்டுமே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அவரது கல்யாணம் நின்றது பற்றியும் கவலைப் படாமல் கமல் படம், ஜெயம் ரவி கூட அப்பாடக்கர், சுந்தர் சியுடன் அரண்மனை – 2 போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் தமிழில் மட்டுமில்லாமல் 2 தெலுங்கு படங்களையும் ஓகே செய்துள்ளார். அவர் ஓகே செய்து இரண்டு தெலுங்கு படங்களில் ஒன்று கோவர்தன், இப்படம் காமெடி கலந்த பேய் படமாக வளர்ந்து வருகிறது.
இப்படத்தில் த்ரிஷா 20 வயது நிரம்பிய பெண்ணாக நடிக்கிறார் என்பதுக்காக 6 கிலோ எடை குறைத்துள்ளார். மேலும் அதே படத்தில் த்ரிஷா வுக்கு இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறதாம், அதற்கும் 10 கிலோ கூட்ட வேண்டுமாம்.
இப்படி ஒரே படத்தில் எடையே குறைத்து, கூட்டுவதால் த்ரிஷாவை புதிய அவதாரத்தில் பார்க்கலாம் என்கிறது தெலுங்கு பட வட்டாராம்.