தனுஷ்-த்ரிஷா இவர்கள் ஜோடி இதுவரை திரையில் வரவில்லை என்றாலும், இருவரும் நல்ல நண்பர்கள். ஆனால், தனுஷிற்கும், வருண் மணியனுக்கும் ஆரம்பத்திலிருந்து சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் த்ரிஷா-வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தத்திற்கு தனுஷ் வந்தாராம், இதனால், கோபமான வருண், த்ரிஷாவிடம் கேட்க, அதற்கு ‘அவர் என் நண்பர், நான் தான் வரச்சொன்னேன்’ என கூலாக கூறியுள்ளார்.
இந்த பதில் அவருக்கு மிக எரிச்சலை உண்டாக்கியது, இதன் பிறகு இருவருக்குமிடையே அவ்வபோது சில கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் பெரிதாக தான், பின் திருமணம் நின்றது என தமிழகத்தின் பிரபல நாளிதழில் கூறப்பட்டுள்ளது.