நகரசபை ஊழியர் குடும்பத்தினர் ஆர்பாட்டம்

268

இரத்து செய்யப்பட்ட நியமணத்தை மீண்டும் வழங்க கோரி அட்டன் நகரசபையின் முன்னால் ஆர்பாட்டமொன்று 06.04.2016 நடைபெற்றது.

அட்டன் நகரசபையில் கடந்த காலத்தில் பணி புரிந்து தற்போது பதவி நீக்கப்பட்டுள்ள நான்கு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களே இன்று பகல் 12 மணியளவில் இவ்வாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட னர்  ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த அரசாங்கத்தில் மேற்படி நான்கு ஊழியர்களுக்கும் நியமணக்கடிதம் வழங்கப்பட்டு சம்பளமும் வழங்கப்பட்டது ஆனால் தற்போது புதிய ஆட்சியின் பின்னர் குறித்த நியமணம் முறையற்றது என குறித்த நியமணத்தை இடத்து செய்து வேலை நிறுத்தப்பட்டுள்ளது ததபோது குடும்பத்தை நடத்த முடியாமல் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றோம் இரத்துசெய்யப்பட்ட   நியமணத்தை மீண்டும் வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.

இது தொடர்பில் அட்டன் நகரசபை செயலாளர் பிரியதர்ஷினி கருத்து தெரிவிக்கையில் மேற்படி நான்கு பேரின் நியமனமும் முறையற்ற நிலையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலதிகாரிகளினால் வேலை வழங்குமாறு அறிவிக்கப்பட்டால் வேலை வழங்க தயார் எனவும் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்  மு.இராமசந்திரன்

7366a47b-877d-4c0e-9af4-b9f0f4b0b76d a9fcd37e-b6e7-4f54-be30-8b00d2a8826e e0a4829d-db72-4874-8f33-fbd56d1e0123

SHARE