நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

371

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பொறுப்பின் கீழ் இருக்கும் நீர் வழங்கல் சபையை மிகவும் தந்திரமான முறையில், நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

நிதியமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செலுத்த முடியாத பெருந்தொகை பணத்தை தேசிய வங்கிகளிடம் இருந்து பெற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த யோசனைக்கு எதிர்ப்பை வெளியிட்ட சபையின் தலைவர், மில்லியன் அல்லது பில்லியன் தொகையான கடன் சுமையை நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சமாளிக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்புச் சபையின் தலைவர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதுடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரான ஆர். டப்ளியூ. ரஞ்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருப்பதுடன் அந்த அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவின்படி இயங்கி வருகின்றது.

இந்த நிலையில், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையும் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவின்படி செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்ட பிரதிபலனாகவே கொழும்பில் அண்மையில் 72 மணிநேர நீர் விநியோகம் தடைப்பட்டதாக பேசப்படுகிறது.

 

SHARE