நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தாவின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் வெளியான தகவல்

117

 

கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று (20) அதிகாலை தனது 71 வது வயதில் காலமானார்

குறிப்பாக ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த நகுலேஸ்வரக் குருக்களின் மகனான இவர் கடந்த வருடம் தந்தையின் மறைவின் பின் ஆதீனகர்த்தாவாக இருந்து ஆலயத்தை வழிநடாத்தி வந்தார்.

இறுதிக்கிரியைகள்
அண்மைக் காலமாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை காலை 6 மணியளவில் ஆரம்பமாகி இறுதி யாத்திரை நாளை 21.03.2024 வியாழக் கிழமை நண்பகல் 12 மணியளவில் நகுலேஸ்வரத்திலிருந்து ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகிறோம்.

SHARE