
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இந்தி படங்களிலும் நடிக்கிறார். ஒரு பாடலுக்கு நடனமும் ஆடுகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நடனத்தில் எனக்கு விருப்பம் உண்டு. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போது, பரத நாட்டியமோ மேற்கத்திய நடனமோ கற்றுக்கொண்டது இல்லை. சினிமாவுக்கு வந்த கதாநாயகர்கள் சிறப்பாக நடனம் ஆடுகிறார்கள்.
அவர்களை போல் நம்மால் ஆட முடியுமா என்று மிரண்டேன். நடனம் தெரியாமல் கதாநாயகர்கள் பக்கத்தில் நிற்க முடியுமா என்ற பயமும் பின் தொடர்ந்தது. ஆரம்பத்தில் நான் நடித்த படங்களில் நடனம் ஆடுவதற்கான வாய்ப்பு இல்லாமல்தான் இருந்தது. அதுகொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சம் நடனம் மீது கவனம் செலுத்தினேன். தெலுங்கு படங்களில் நடனத்தை ஒரு வாழ்க்கை முறையாகவே பார்க்கின்றனர்.

இவ்வாறு தமன்னா கூறினார்.