நடிகர்களை விளாசி எடுத்த ஆர்.கே.செல்வமணி

246

பிரபல இயக்குனர் திரைப்பட நடிகை ரோஜாவின் கணவர் என அனைவராலும் அறியப்பட்டவர் ஆர்.கே.செல்வமணி. இவர் சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிகவும் சர்ச்சையாக பேசினார்.

இதில் இவர் கூறுகையில், ‘என் மனைவியின் அண்ணன் மகள் என்னிடம் “என்ன.. உங்க சென்னை நட்சத்திர கிரிக்கெட் அணி இவ்வளவு மோசமாக உள்ளது, எல்லா போட்டிகளிலும் தோற்றுக்கொண்டே வருகிறார்கள்” என கேட்டார்.

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, தயவு செய்து நன்றாக விளையாட தெரிந்தவர்களை அனுப்புங்கள், அல்லது நல்ல பயிற்சி கொடுத்த பின்பாவது போட்டிக்கு அனுப்புங்கள். இதையெல்லாம் செய்யாமல் போய் மானத்தை வாங்காதீர்கள்’ என விளாசி எடுத்துள்ளார்.

SHARE