நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

297

நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக உலக நாயகன் கமல்ஹாசன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆழ்வார்பேட்டையில் அலுவலக மாடிப்படியிலிருந்து நேற்று நள்ளிரவு கமல் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டு மற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இவர் குணமாக சில வாரங்கள் ஆகும் எனவும், அதுவரையிலும் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

kamal hassan(c)

SHARE