நடிகர் சிம்புவுக்கு ஒரு வழியாக திருமணம்? பொண்ணு யாருனு பாருங்க!

115

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

39 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று.

திருமணம்?
இதற்கிடையில், சிம்புவும் நயன்தாராவும் காதலித்து பிரேக் அப் செய்துக்கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனையடுத்து பல வருடங்கள் சிங்கிளாக இருந்த சிம்பு ஹன்சிகாவை காதலித்தார். அதுவும் பிரிவிலேயே முடிந்தது.

இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், சினிமா ஃபைனான்சியருமான ஒருவரின் மகளை நடிகர் சிம்பு திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

SHARE