நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டு ஊழியர் மர்ம மரணம்… கொலையா?.. தற்கொலையா?..

215

திருச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் தோட்ட வேலை செய்து வந்த ஆறுமுகம் என்பவர் கல் குவாரியில் சடலமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி காஜா மலை பகுதியில் உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் வீட்டில் ஆறுமுகம் என்பவர் தோட்ட வேலை செய்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக வேலைக்கு வராத நிலையில் கல்குவாரி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மர்மமான முறையில் நிகழ்ந்திருக்கும் இம்மரணம் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE