நடிகர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் எழில் இயக்கும் புதிய திரைப்படமொன்றில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இதில் பணிபுரிந்து வரும் கனல் கண்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், படத்திற்கு “ஆயிர ஜென்மங்கள்“ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா, சர்வம் தாளமயம் ஆகிய திரைப்படங்கள் இரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றமை குறிப்பிடத்தக்கது.