நடிகர் திலீபின் உடல்நிலை கவலைக்கிடம்..

213

நடிகை பாவனா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகர் திலீப்பின் உடல்நிலை மோசமாகியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற காவல் நீட்டிப்பு காரணமாக ஆலுவா கிளை சிறையில் நடிகர் திலீப் அடைக்கப்பட்டுள்ளார்.

சசிகலாவுக்கு பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து நடிகர் திலீப்புக்கும் சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் இந்த புகாரை சிறைத்துறை நிர்வாகம் மறுத்தது.

இந்நிலையில் காதுகளின் உட்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பால் நடிகர் திலீப் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் திலீப்பின் உடல்நிலை சீராக இல்லை என உறுதி செய்துள்ளனர். நாளையுடன் நடிகர் திலீப்பின் நீதிமன்ற காவல் முடிவதால் அவரது தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

SHARE