நடிகர் விக்ரம் மகளின் ரூ.12 லட்சம் வைர மோதிரம் மாயம்

301

நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா அணிந்திருந்த ரூ.12 லட்சம் மதிப்பிலான வைரமோதிரம் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா. இவர் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் வசித்து வருகிறார். அக்ஷிதா- திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனுரஞ்சித் ஆகியோர் திருமணம் கடந்த மாதம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில், அக்ஷிதா ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காதர் நவாஸ்கான் தெருவில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தார். இதையடுத்து ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். வீட்டுக்குச் சென்றவுடன் அக்ஷிதா தனது கைவிரலைப் பார்த்தபோது அதில் அணிந்திருந்த வைரமோதிரத்தைக் காணவில்லையாம். இந்த மோதிரத்தின் விலை ரூ. 12 லட்சம் என்று கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த அக்ஷிதா இது குறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.vikram6

SHARE