நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்தாரா? வருமான வரித்துறையின் தகவல்

219

நடிகர் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தின் ஜி.எஸ்.டி, டிஜிட்டல் இந்தியா போன்ற காட்சிகள் சர்ச்சைக்குள்ளானது. இதே போல வேறு சில பிரச்சனைகள் தலைவா, புலி படங்களிலும் தொடர்ந்தது.

புலி பட ரிலீஸின் போது விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். நேற்று அவர்கள் வெளியிட்டுள்ள தகவலில் படி கடந்த 2015 ல் விஜய், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட 10 பேரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது விஜய் புலி படத்திற்கான சம்பளத்தில் ரூ 5 கோடியை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது உறுதியானது. விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதோடு அதற்கான வரியும், காம்ப்வுண்டிங் டேக்ஸ் உடன் சேர்த்து அவர் செலுத்தினார்.

மேலும் அவர் அதற்கான ஆவணத்தை 2016 ல் தாக்கல் செய்ததால் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் விதிமுறையின் படி காம்ப்வுண்டு டேக்ஸ் செலுத்திய ஒருவர் மீண்டும் வரி ஏய்ப்பு செய்தால் சிறைக்கு செல்லும் கண்டிஷனும் உண்டு.

விஜய்க்கான வாய்ப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

SHARE