நடிகை அலியா பட்டிற்கு கொலை மிரட்டல்- அதிர்ச்சியில் பாலிவுட்

241

பாலிவுட் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை அலியா பட். இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார், கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த டியர் ஜிண்டாகி சூப்பர் ஹிட்டானது.

இந்த படத்திற்காக இவருக்கு ப்லிம் பேர் விருது கூட கிடைத்தது, இந்நிலையில் அலியா பட்டிற்கும், அவருடைய தந்தை மகேஷ் பட்டிற்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதாம்.

மேலும், ரூ 50 லட்சம் பணம் வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்களாம், இதுக்குறித்து மகேஷ் பட் போலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதை போலிஸார் விசாரிக்கையில் யாரோ வேலையில்லாதவன் செய்த வேலை இது, கூடிய விரைவில் பிடித்து விடிவோம் என கூறியுள்ளார்கள். இந்நிகழ்வு பாலிவுட் திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SHARE