நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம்

176
நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம்

ஆனந்தி
தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார். பின்னர், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம் நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஆனந்திஇந்நிலையில், நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம். இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் திருமணம், இன்று இரவு வாராங்கல்லில் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு, சினிமா துறையினர் யாரும் அழைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
SHARE