நடிகை திவ்யா கணவரை ஏன் பிரிந்தார் தெரியுமா?

245

நடிகை திவ்யா உன்னி ஏன் அவரது கணவர் டாக்டர் சுதீர் சேகரனை பிரிந்துவிட்டார் என்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் திவ்யா உன்னி. அவர் முறைப்படி பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி கற்றவர். நடிப்பை போன்றே நாட்டியத்திலும் ஈடுபாடு உள்ளவர். அவர் கடந்த 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் சேகரனை திருமணம் செய்தார்.

திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

திவ்யா, சுதீர் தம்பதிக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து திவ்யா கணவரை பிரிந்துவிட்டார். குழந்தைகளை அழைத்துக் கொண்டு அமெரிக்காவில் இருந்து கொச்சிக்கு வந்துவிட்டார்.

சுதீர் சேகரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை திவ்யா கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து தான் அவர் கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் என்று முதலில் கூறப்பட்டது.

திவ்யாவின் கணவருக்கு ஈகோ அதிகமாம். அதனால் தான் அவர்கள் பிரிந்துவிட்டார்களாம். சுதீருக்கு திவ்யா அமெரிக்காவில் நடனப் பள்ளி நடத்தி வந்தது சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

என்ன எப்பொழுது பார்த்தாலும் நடனம் நடனம் என்று கிடக்கிறாய், ஒழுங்காக நடனப் பள்ளியை மூடிவிட்டு வீட்டோடு இரு என்று திவ்யாவுக்கு கட்டளையிட்டாராம் சுதீர். நடனத்தை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று கூறி கேரளாவுக்கு வந்துவிட்டாராம் திவ்யா.

நடனப் பள்ளி தானே நடத்துகிறார், நடத்திட்டுப் போகட்டுமே. வீட்டில் சும்மா இருந்து என்ன செய்வார் என்று திவ்யா மற்றும் அவரது கணவரின் குடும்பத்தாரும் எவ்வளவோ சொல்லியும் சுதீர் கேட்கவில்லையாம்.

தான் என்ற அகந்தை உள்ளவருடன் இனியும் சேர்ந்து வாழ முடியாது என்று கிளம்பி வந்துள்ள திவ்யா கொச்சியில் நடன ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாராம். விரைவில் திரைப்படங்களிலும் நடிக்கப் போகிறாராம்.tevjatevja01

SHARE