நடிகை நமீதா அகோரியாக நடித்துள்ள புதிய திரைப்படம்

233

நடிகை நமீதா தன் காதலர் வீர் என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்திலேயே தங்கிவிட்டார். இவர்களின் திருமணம் கடந்த வருட இறுதியில் திருப்பதியில் நடைபெற்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நமீதாவுக்கு வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வு என்றே சொல்லலாம். ஒரு நேரத்தில் இவர் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார்.

பின் அந்த நிலை அப்படியே மாறிப்போனது. மலையாள படங்களில் அவர் நடித்த புலி முருகன் சில மாற்றங்களை கொடுத்தது. இந்நிலையில் அவர் திருமணத்திற்கு பின் கணவர் சம்மத்துடன் நடிப்பேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் இதுவரை தன் படங்களில் இல்லாத படி அகோரியாக பொட்டு படத்தில் நடித்துள்ளார். கடந்த வருடமே வெளியாக வேண்டிய இப்படம் அப்படியே தள்ளிப்போனது.

வடிவுடையான் இயக்கத்தில் பரத், இனியா மற்றும் பலர் அவருடன் இதில் நடித்துள்ளார்கள். இப்படம் வரும் மே 25ல் வெளியாகவுள்ளதாம். திருமணத்திற்கு பின் நமீதா கொடுக்கும் திகில் படத்தை காண சில நாட்கள் காத்திருப்போம்.

SHARE