பிரபல நடிகை பாவனா கடந்த வெள்ளிக்கிழமை இரவு, படப்பிடிப்பை முடித்துவிட்டு கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர்.
அதன் பின் இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருக்கவேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த சதிக்கு பின்னால் சில பிரபலங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சியில் மீளாத சினிமாத் துறைக்கு மேலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நடிகை பாவனாவைத் தொடர்ந்து நடிகை வரலட்சுமி பிரபல தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி என்னை பாலியல் தொந்தரவு செய்ததாக தற்போது கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– See more at: http://www.manithan.com/news/20170220125191#sthash.yzzYRPBp.dpuf