நடிகை வனிதா தான் என்னை மோசம் செய்தார்.

438

Vanitha Vijayakumar-reel-30 vibrant_2405696f

நேற்று நடிகை வனிதா விஜயகுமார் Vibrant Movies தலைமையாளர் திரு வெங்கடேஷ் ராஜா மீது சென்னை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்து இருந்தார்.

அதாவது எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தை Vibrant Movies நிறுவனம் சார்பில் வெளியிட்டார் வெங்கடேஷ் ராஜா.

இந்த நிறுவனத்திடம் தமிழகம் முழுக்க எத்தனை திரையரங்கில் படம் ஓட வேண்டுமோ, அத்தனை திரையரங்குகளுக்கும், விளம்பர செலவுக்கும் பணம் கொடுத்தால் போதும். இவரே திரையரங்கங்களை கேட்டு பெற்றுத்தருவார்.

அதற்காக கமிஷன் தனியாக பெற்றுக் கொள்ளப்படும். அப்படிதான் இந்த படத்தையும் வெளியிட்டாராம். இதற்காக சுமார் 80 திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதாக கூறி, 30 லட்சத்தை முன்பே வாங்கியும் விட்டாராம்.

ஆனால் சொன்ன படி படம் 80 திரையரங்குகளில் வெளியாக வில்லை எனக்கு இதனால் பல லட்சம் நஷ்டம் என்று சொல்லி வெங்கடேஷ் ராஜா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு வெங்கடேஷ் ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் வனிதா கடைசி வரை என்னிடம் படத்தை போட்டு காட்டவில்லை.

என்னுடைய சொந்த பணத்தில் தான் செலவு செய்தேன். Qube, Promotion என இதுவரை செய்த செலவால் எனக்கு 16 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

படம் வந்தவுடன் பணம் தருவதாக சொன்னதை நம்பித்தான் செலவு செய்தேன். இப்போது பணம் தரமறுத்து தகாத வார்த்தைகளால் பேசுகிறார் என்று இவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

SHARE