நடிகை விஜியின் மகள் கதாநாயகியாக அறிமுகம்! (படங்கள்)  

271

சந்திரசேகர் – நடிகை விஜி (சரிதாவின் சகோதரி. தில்லுமுல்லு படத்தில் நடித்தவர்) தம்பதியின் மகளான லவ்லின் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

லவ்லின், மும்பையிலுள்ள அனுபம் கேர் சினிமாப் பள்ளியில் நடிப்புக் கலையைப் பயின்றுள்ளார். தற்போது துபாயில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார். லவ்லின் கதாநாயகியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் உள்ளிட்ட இதர தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

SHARE