நடிகை ஸ்ரீதேவியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் ரத்தித்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாக சொல்லப்பட்டது. விடுதி அறையில் குளிக்கும் தொட்டியில் சுயநினைவை இழந்து அவர் விழுந்தது தெரியவந்தது.
இந்த விசயத்தை இதுவரை துபாய் காவல்துறை கையாண்டு வந்தது. தற்போது துபாய் நாட்டு அமைப்பான Dubai public prosecution அமைப்பு இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறது.
இவர்களின் ஒப்புதல் கிடைத்தால் தான் ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் செய்ய அனுப்பப்படுமாம். தற்போது அந்த உடல் பிணவறையில் தான் இருக்கிறதாம். இந்த தகவல் துபாய் நாட்டு பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.