நடுவருக்கு எதிரான சைகை: முரளிவிஜய்க்கு அபராதம்

311
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக இந்தியாவின் முரளி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 334 ஓட்டங்களையும், தென் ஆப்பிரிக்கா 121 ஓட்டங்களையும் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய விளையாடிக் கொண்டிருந்த போது, இந்திய அணியின் முரளி விஜய், மோர்னே மோர்கல் வீசிய ‘பவுன்சர்’ பந்தை தவிர்க்க முயற்சித்த போது, பந்து அவரது முழங்கை உறையை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டேன் விலாசின் கையில் விழுந்தது.

உடனே நடுவர் தர்மசேனா அவுட் கொடுத்ததால் அதிருப்தி அடைந்த விஜய், பந்து முழங்கை உறையில் மட்டுமே பட்டது என்று சைகை காட்டியபடி வெளியேறினார்.

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் நடந்து கொண்டதால், போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

SHARE