நடுவானில் உயிரிழந்த விமானி: அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்

219

அமெரிக்காவில் பயணிகள் விமானத்தின் விமானி ஒருவர் நடுவானில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Dallas நகரில் இருந்து நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque என்ற நகருக்கு அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நேற்று பிற்பகல் புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு துணை விமானியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் அப்போது மருத்துவர் ஒருவர் இருந்ததால் அவர் உடனடியாக துணை விமானிக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

ஆனால், நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகும் சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் நடுவானில் துணை விமானி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து விமானத்தில் அவசர நிலையை விமானி அறிவித்துள்ளார். துணை விமானி இறந்தபிறகு விமானம் 10 நிமிடங்கள் பறந்துள்ளது.

பின்னர் சரியாக 3.33 மணியளவில் விமானம் சேரவேண்டிய இடத்தில் பத்திரமாக தரையிறங்கியது.

ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு துணை விமானியின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது.

எனினும், திடீரென துணை விமானிக்கு என்ன உடல் நிலை கோளாறு ஏற்பட்டது எனத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும், இச்சம்பவத்தில் பயணிகளுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE