குருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று நேற்று வெளியாகியிருந்தது.
நடு வீதியில் வைத்து யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் விரட்டி விரட்டி கூட்டமொன்று தாக்கும் அந்த காணாளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த யுவதி மீது எதற்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண் தனது காதலனுடன் குருணாகல் பகுதியில் வீதியில் நடந்து சென்றுள்ளார்.
இதன்போது வீதியில் இருந்த யாசகர் ஒருவர் தனக்கு பண உதவி செய்யுமாறு குறித்த யுவதியிடம் கேட்டுள்ளார். எனினும், குறித்த பெண் யாசகம் கேட்ட நபர் மீது எச்சில் துப்பி தரக்குறைவாக பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவதானித்த சில இளைஞர்களே இவ்வாறு யுவதியின் மீதும் அவருடைய காதலன் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.