நடேசன் கொலையில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு ; பிரதீப் மாஸ்ரர் சாட்சியம்

335

 

ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு எல்லை வீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1076_1445901630_IMG_2369

நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர். மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது. அக்காலப்பகுதியில் பிள்ளையானும் சகாக்களும் இருதயபுரம் இராணுவ முகாமில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

நடேசன் இறந்த பின் சற்று நேரத்தில் அப்பகுதியில் இருந்த ஆஞ்சநேயர் மரக்காலை சுற்றுமதிலுக்கு அருகில் பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். கொலையாளிகள் பின்னர் அம்மக்களுடன் நின்று நடக்கும் சம்பவங்களை அவதானித்து கொண்டிருந்தனர் என பிரதீப் மாஸ்ரர் சாட்சியம் கூறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி கூறியுள்ளார்.

SHARE