நடைமுறை பொருளாதார பிரச்சினை காரணமாக அரசாங்கம், இறக்குமதிகளை 500 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து ஒரு பில்லியன் வரை குறைக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்காக இறக்குமதி தீர்வைகளை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொருளாதார நிலைமைகளை சீர்செய்ய இலங்கை புதிய ஏற்றுமதிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நடைமுறை பிரச்சினைக்கு தீர்வுக்காணும் வகையில் சவூதி அரேபியா, 1.5 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.