2018ம் ஆண்டு தமிழ் சினிமா ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியோடு தொடங்கியுள்ளது. நட்சத்திர விழா 2018 கடந்த 6ம் தேதி தொடங்கி அமோகமாக நடந்தது.
இந்நிகழ்ச்சி ஒருபக்கம் நன்றாக நடந்தாலும் பல பிரச்சனைகளும் வந்தது. பிரபலங்கள் பலர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. நடிகர் அஜித் ரசிகர்களிடம் பணம் வாங்குவதற்கு பதிலாக நாமே செலவு செய்யலாம் என்று நட்சத்திர விழா குறித்து கூறியதாக பிரபல நடிகர் கூறியிருந்தார்.
தற்போது இதுகுறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில், நான் நடித்தால் எனக்கு பணம், அப்படிதான் இந்நிகழ்ச்சி வந்து பார்த்தவர்கள் தான் பணம் கொடுத்திருக்கிறார். என்னுடைய வேலைக்கான ஒரு விலை என்று தான் இதை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.