நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமனம்- பிரதேச மக்கள் மகிழச்சி:-

301
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தமையை குளோபல் தமிழ் செய்திகள் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தமது மகிழ்சசியை குளோபல் தமிழ் செய்திகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
கடந்த நான்கு வருடங்களாக நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாமல் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் மக்கள் சொல்லணாத் துயரங்களுக்கு ஆளாகியிருந்தனர்.
தமது வைத்தியசேவையை நிவர்த்தி செய்ய மல்லாவிக்கும் கிளிநொச்சிக்கும் அக்கராயனுக்கும் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு சென்றாலும் போக்குவரத்துப் பிரச்சினை, யானைகளின் அபாயம் என அந்த மக்கள் ஏராளம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தனர்.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி பிரதேச மக்களும் பொது அமைப்புக்களும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். அதற்கும் பலன் கிடைக்கவில்லை என்று கூறி அரச செயலகங்களை முடக்கும் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் எச்சரித்திருந்தனர்.
இந்த நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமது வைத்திய தேவைகளை சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என்று மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஊடங்களுக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியை வெளிப்படுத்துவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
SHARE