
`மீசைய முறுக்கு’ படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `நட்பே துணை’. ஹாக்கி விளையாட்டு மற்றும் நட்பை மையப்படுத்திய இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்க, இந்த படத்தில் ஆதி ஜோடியாக அனகா என்ற புதுமுகம் தமிழில் அறிமுகமாகிறார்.
கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
See you all in theatres with your friends and family ??#AvniMovies #SundarC #NatpeThunai @AvniGroups @thinkmusicindia @Screensceneoffl pic.twitter.com/JsKA8Nk7oG
— Hiphop Tamizha (@hiphoptamizha) March 25, 2019
சுந்தர்.சி தனது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.