நண்பனின் தேவை நற்பணி மன்றத்தினால் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பின் தங்கிய கிராமங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச கணினிப்பயிற்சி நெறி நேற்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாளம்பன் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 மாணவர்களை இணைத்துக்கொண்டு குறித்த இலவச கணினி பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதன் ஆரம்ப நிகழ்வு நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின் இயக்குனர் பவமொழி பவன் தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குனசீலன் மற்றும் சமூக சேவையாளரும், சமாதான நீதவானுமாகிய கனேசலிங்கம் சொக்கன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த இலவச கணினி பயிற்சியை ஆரம்பித்து வைத்தனர்.