நண்பன் பிறந்தநாளில் குத்தாட்டம் போட்ட விஜய்சேதுபதி 

305

 

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை பறையிசைக்கலைஞர்கள் குழுவோடு எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் படக்குழுவினர் நேற்று நடிகர் அருள்தாஸின்பிறந்தநாளை கொண்டாடினர்.

அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த பறையிசைக்கலைஞர்கள் பறையை இசைக்க அதற்குத் தகுந்தாற்போல் விஜய்சேதுபதி ஆடத் தொடங்க, அவரோடு மற்றவர்களும் ஆடத் தொடங்கிவிட்டனர்.

இதனை சிலர் படம்பிடித்து சமூகவலைதளங்களில் பரவி தொடங்கி விட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

SHARE