நண்பர்கள் – உறவினர்களிற்கு உதவும் சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு வரை..

207
நண்பர்கள் மற்றும் உறவினர்களிற்கு உதவும் சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கை வெளிவிவகார அமைச்சு வரை பரவ ஆரம்பித்துள்ளது.
படுகொலைசெய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க சிட்னிக்கான துணைதூதராக நியமிக்கப்பட்டார்.பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகரும்,கிழக்கு மாகாண ஆளுநருமான ஓஸ்டின் பெர்ணாண்டோவின் மருமகன் மேஜர் வர்ணபால பிரிட்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு நியமிக்கப்பட்டார், அவர் பிரிட்டிஸ் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குடும்பத்தவர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களால் நிரம்பிவழிந்த வெளிவிவகாகார அமைச்சை அந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பது என்பதே மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல்பிரச்சாரங்களில் முக்கிய விடயமாககாணப்பட்டது.
எனினும் புதிய அரசாங்கமும் அதேகொள்கையை பின்பற்ற தொடங்கியுள்ளது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.ராஜபக்ச அரசாங்கத்தின் குடும்ப ஆட்சிபோல இது காணப்படுகின்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி சிறிசேனவின் நெருங்கிய ஆதரவாளர்களான இவர்கள் ராஜபக்ச காலத்தை போன்று  வெளிவிவகார சேவையைசேர்ந்த இராஜதந்திரிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
விக்கிரமதுங்கவும்,மனோஜ் வர்ணபாலவும் இதுவரையில் இராஜதந்திரபதவிகள் எதனையும் வகிக்காதது குறிப்பிடத்தக்கது.
SHARE