தேசிய நத்தார் பண்டிகை நிகழ்வு நாளை 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது என்று சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- கத்தோலிக்க திருச்சபையின் தேசிய உற்சவம் 20ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதியும் கலந்துகொள்வார். கர்தினாலும் வருகைதருவார். இந்நிகழ்வில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன். அத்துடன், கொழும்பை மையப்படுத்தி பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன’ –
நத்தார் பண்டிகை ஜனாதிபதி தலைமையில் நாளை யாழில்! – கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் அழைப்பு –