நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடற்றொழில் திணைக்களங்களுக்கு பணித்துள்ளார்.

431

நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை – வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடற்றொழில் திணைக்களங்களுக்கு பணித்துள்ளார்.

நந்திக்கடல் பிரதேசத்தில் தற்போது இறால் சீசன் இடம்பெறுவதால் வட்டுவாகல், நந்திக்கடல் பகுதியில் இரவு வேளைகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை, கூட்டு வலை, படுப்பு வலைகளைப் யன்படுத்தி மீன் மற்றும் இறால் பிடியில் பலரும் ஈடுபடுகின்றனர் என அங்குள்ள மக்கள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களுக்கு முறைப்பாடு வழங்கினர்.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் இவ்விடயங்களை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கையாண்டு எமது கடல் வளத்தையும் சுரண்டுகின்ற எவருக்கும் இடம் கொடாது உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.

ஒரு சிலரது சுயநலத்துக்காக எமது கடல் வளத்தை அழிக்க முடியாது என்றும் சட்டத்தின் முன் யாவரும் ஒருவரே என்பதையும் அவர் தெரிவித்தார்

SHARE