நன்றி கூற போன் எடுத்த நடிகரை அசிங்கப்படுத்திய விஐய்

103

விஜய்யின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள் பலர். அதில் ஒருவர் பிரபல நடிகர் ராதா ரவி. விஜய் குழந்தையாக இருக்கும்போதே அவரின் குடும்பத்துடன் இன்று வரை நெருக்கமாக பழகி வருபவர்.

விஜய்யை விஜிமா என செல்லமாக எப்போதும் அழைப்பவர். அண்மையில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் மிகவும் மன வருத்தத்துடன் பேசியுள்ளார். என் பேரன் விஜய்யின் ரசிகர். அவர் விஜய்யை பார்க்கவேண்டும் என கூறினான். குடும்பத்துடன் அழைத்துச்சென்றேன். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இது எட்டு வருடங்களுக்கு முன்.

மேலும் சர்கார் படத்தில் அவருடன் நடித்திருந்தேன். இதன் சர்கார் இசை வெளியீட்டு விழா மேடையில் மயக்கமாகி கிழே விழுந்து உட்கார்ந்துவிட்டேன். அப்போது விஜய்யும் என்னை தூக்கிவிட்டார்.

பின் நன்றி சொல்வதற்காக சில நாட்கள் கழித்து போனில் விஜய்யை அழைக்க அவரின் உதவியாளர் போனை எடுத்து ஓகே சார், ஆனால் அன்று மாதிரி கூட்டத்தை இழுத்துக்கொண்டு வரவேண்டாம் என கூறினார்.

உடனே நான் நான் வரவேயில்லை என கூறி போனை வைத்துவிட்டேன். அவருக்கு கூட்டம் என்றால் அது என் குடும்பம் அல்லவா. என குடும்பம் எனக்கு முக்கியம் என மனவேதனையுடன் கூறியுள்ளார்.

SHARE