இளைய தளபதி விஜய் மற்றும் தல அஜித் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருக்கான ரேஸில் முதலிடத்தில் இருப்பவர்கள். இந்நிலையில் அஜித் தற்போதெல்லாம் தன் வயதை காட்டிக்கொள்ளாமல் எதார்த்தமான தோற்றத்திலேயே தான் நடிக்கின்றார்.
ஆனால், விஜய் இன்றும் இளமையாக தான் தன் படங்களில் தோன்றுகிறார். முதன் முறையாக அட்லீ படத்தில் அஜித்தை போலவே விஜய்யும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அது என்னவென்றால் இப்படத்தில் எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் தன் நிஜ வயதான 40 வயதிலேயே படத்தில் தோன்றவுள்ளதாக கூறப்படுகின்றது.