நானும் ரவுடிதான் படத்தில் காதல் ஜோடிகளாக இணைந்து நடித்திருந்த விஜய் சேதுபதி, நயன்தாரா தற்போது வேறு படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றனர்.
மாயா படத்திற்கு பிறகு திரில்லர் கதைக்களத்தில் நயன்தாரா நடித்திருந்த டோரா படம் மார்ச் 31ம் தேதி வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் முதல் நாளில் சென்னையில் ரூ. 19 லட்சம் வசூலித்துள்ளது.
அதேபோல் தொலைக்காட்சியை மையப்படுத்தி விஜய் சேதுபதி நடித்திருந்த கவண் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுக்கின்றனர். படமும் முதல் நாளில் ரூ. 34 லட்சம் வசூலித்துள்ளது. படம் முதல் வாரத்தில் ரூ. 1 கோடி தொடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.