அண்மைக் காலமாக சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை நயன்தாரா. நயன் தாரவா தெரியாதவர் யாருமில்லை. இந்நிலையில் அதிர்ச்சியான சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் நயன்.
மலேசியா சென்றிருந்த நயன்தாராவிடம், பாஸ்போர்ட் தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரித்ததாக படங்கள் வெளியாகி உள்ளது.
“இரண்டு நாட்களுக்கு முன்பு நயன்தாரா மலேசியா வந்தபோது அவரது பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும், அவரது டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருந்ததால் அவரை மலேசிய விமான நிலைய காவலர்கள் சிறிது நேரம் விசாரித்து விட்டு அனுப்பி விட்டார்கள். அந்த போட்டோக்கள்தான் இப்போது வைரலாக பரவுகிறது.
இந்நிலையில் மலேசியா விமான நிலையம் இவர் சென்ற போது, நயன்தாராவிடம் போதை மருந்து இருப்பதாக யாரோ கூற, அவரிடம் சோதனை நடந்ததாக தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் கூறினர்.
ஆனால் உண்மையில் நடந்தது என்னவெனில்
சமீபத்தில் விக்ரம் நடிக்கும் படத்தின் காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டது. அதில் நயன்தாரா ரகசிய ஏஜெண்டாக வருவார். அந்த காட்சியும் மலேசிய விமான நிலையத்தில் எடுக்கப்பட்டது. அந்த போட்டாவாக கூட இருக்கலாம். ஆனால் அவரின் பாஸ்போர்ட் பெயரும், டிக்கெட்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம். அதனால் உயர் அதிகாரியின் சீல் வைக்கவில்லை என்பதால் அவரிடம் விசாரணை நடந்தது. அந்த போட்டோக்கள்தான் இப்போது வைரலாக வருகிறது. இதெல்லாம் நயனுக்கு புதியது இல்லை”
நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். ஆனால், படத்துக்காக தனது பெயரை நயன்தாரா என்று மாற்றினார். இந்நிலையில், மலேசியா சென்ற நயன்தாராவிடம், பாஸ்போர்ட்டில் இருந்த பெயர் குறித்து விசாரணை நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
பாஸ்போர்ட்டில், நயன்தாரா குரியன் என்றும், பிறந்த ஊர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்றும் இருக்கிறது. ஆனால் நயன்தாராவின் சொந்த ஊர் கேரளா. ஆனால் இந்த போட்டோ படத்துக்காக எடுக்கப்பட்டதாக என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

