இன்று தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அவர்கள் எல்லோருக்கும் படம் கொடுக்க ஆளில்லை என்று தான் சொல்லவேண்டும்.
ஹன்சிகா
நடிகை ஹன்சிகாவின் பெயர் ஒரு நேரத்தில் திரைத்துறையில் பரவலாக அடிபட்டது. அவருக்கு படங்கள் வந்தன. ஆனால் சமீப காலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.
2011 இல் தமிழுக்கு வந்த ஹன்சிகா இந்த வருடத்தில் அரண்மனை 2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன் ஆகிய நான்கு படங்கள் மட்டுமே அவர் நடிப்பில் வெளியாகியுள்ளது.
இதில் அரண்மனை 2 , மனிதன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
ஸ்ரீ திவ்யா
2013 ல் வந்த ஸ்ரீ திவ்யா பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, ரெமோ, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என 6 படங்களில் நடித்துள்ளார்.
இதில் கேமியோ ரோலில் இவர் நடித்த ரெமோ தவிர மற்ற படங்கள் தோல்விதான்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஆறாது சினம், ஹலோ நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை, பறந்து செல்லவா என 7 படங்களில் நடித்துள்ளார். விரைவில் மோ என்னும் இவரது படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவருக்கு மனிதன், தர்மதுரை இவ்விரு படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை தந்தது.
நயன்தாரா
நயன்தாரா இது நம்ம ஆளு, இருமுகன், திருநாள், காஷ்மோரா போன்ற 4 படங்களில் நடித்துள்ளார். இவர் விக்ரமுடன் நடித்த இருமுகன் , கார்த்தியுடன் நடித்த காஷ்மோரா ஆகியன ஹிட் இடங்களை பிடித்தது.
திரிஷா, தமன்னா
திரிஷாவுக்கு அரண்மனை 2, கொடி வெற்றியை தட்டிச்சென்றாலும் நாயகி படம் வெற்றி பெறவில்லை.
தமன்னாவுக்கு தர்மதுரை, தோழா, தேவி வரவேற்பை பெற்றாலும் இப்போது வந்துள்ள கத்தி சண்டை எதிர்பார்த்த அளவு இல்லை.
கீர்த்தி சுரேஷ், லட்சுமி மேனன்
கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன், தொடரி, ரெமோ என 3 படங்களில் நடித்திருந்தாலும் சிவகார்த்திகேயனுடன் நடித்த படங்கள் மட்டுமே ஹிட்டானது.
லட்சுமி மேனன் நடித்த மிருதன், றெக்க ஆகிய இருபடங்களுமே பெரியதாக இடம் பெறவில்லை.
அமலா பால், எமி ஜாக்சன்
அமலா பால் நடித்த அம்மா கணக்கு, முருகவேல் என இரு படங்களும் தோல்விதான்.
எமி ஜாக்சனுக்கு தெறி மட்டுமே ஹிட். உதயநிதியுடன் நடித்த கெத்து, இவர் கேமியோ ரோலில் வந்த தேவி படம் ஆகியன எடுபடவில்லை