உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் வாழ்ந்து வரும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூன்று மாதங்களில் மூடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மக்கள் காணிகளை இனங்கண்டு அடையாளப்படுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதுமாத்திரமன்றி வடக்கு மாகாண மக்கள் தமது சொந்த காணிகளையே கேட்கின்றார்கள் எனவும் மாறாக இராணுவம் வசமுள்ள காணிகளை அல்ல எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.